டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவிக்கும் கனடா
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின்(Donald Trump) அதிரடி அறிவிப்பு ஆபத்தானது என கனடா(Canada) தெரிவித்துள்ளது.
குயின்ஸ்பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கனேடிய மாகாண முதல்வர்டக் போர்ட் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கனடா, மேக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.
ட்ரம்பின் யோசனை
ட்ரம்பின் இந்த யோசனையானது கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தை மிக மோசமாக பாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த வரியினால் ஒன்றாறியோ மாகாண ஏற்றுமதி துறை பெரும் பின்னடைவை எதிர் நோக்க நேரிடலாம் எனவும் தொழில் வாய்ப்புகளுக்கு பெரும் தாக்கம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,கடமைகளைப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே வரிவிதிப்பு குறித்த நிறைவேற்று அதிகார உத்தரவு பிறப்பிக்கப்படும் என டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |