தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
திருகோணமலையில் (Trincomalee) இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் ( R. Sampanthan) முதலாவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு நினைவேந்தல்
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குறித்த நிகழ்விற்கு தலைமை தாங்கியுள்ளார்.
இந்தநிலையில், மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் அவர் பற்றிய பேருரையும் இதன்போது நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருமலை மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா, கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






