நாட்டில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக கடற்றொளிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை பேலியகொட (Peliyagoda) மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.
விலை மேலும் உயரலாம்
இதேவேளை மழையுடன் கூடிய வானிலையால் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் மொத்த விலை உயராத நிலையில், சில்லரை விற்பனையில் விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |