சந்தையில் மீன்களின் விலை திடீர் உயர்வு!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Kanna
சந்தைகளில் மீன்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, தலபத், கொப்பரை போன்ற மீன்கள் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் இவ்வாறு மீனின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முட்டை கோழி இறைச்சியின் விலைகளும் உயர்வு
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது முட்டையின் விலை 50 ரூபாய் வரையிலும், கோழி இறைச்சி 1 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
