யாழ்ப்பாணத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த அவலம்
Jaffna
Sri Lanka Fisherman
By Vanan
யாழ்ப்பாணம் குருநகரில் நேற்று(15) இரவு கடற்றொழில் மேற்கொள்ளச் சென்றவர் நீரில் அமிழ்ந்து நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மரண விசாரணை

மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப்பார்த்தபொழுது நீருள் அமிழ்ந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி