பொத்துவில் கடலில் சிக்கி தத்தளித்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்பு!
இலங்கைக்கு கிழக்கே பொத்துவில் கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய கடற்றொழிலாளரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு பணி நடைபெற்றுள்ளது.
நேற்று ( 7) நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கபட்டது.
விஜயபாகு கப்பல்
இந்த தீவிர தேடுதலில் பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன் அவர் கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்படை மற்றும் கடற்றொழிலாள சமூகத்தினரைப் பாதுகாப்பதற்காக, இவ்வாறான உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தபக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 6 மணி நேரம் முன்