குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

Indian fishermen Imran Maharoof Sri Lanka Fisherman Gun Shooting
By Thulsi Jun 04, 2025 10:09 AM GMT
Report

புதிய இணைப்பு

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இன்றைய (4) நாடாளுமன்ற அமர்வின் போது குச்சவெளியில் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதி அமைச்சர் இது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதி அளித்தார்.

முதலாம் இணைப்பு

கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளைப் போல் நடத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) குற்றம் சாட்டியுள்ளார்.

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி | Fisherman Shot By Sri Lankan Navy

குச்சவெளியில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

கெஹெலியவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

கெஹெலியவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை

சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி | Fisherman Shot By Sri Lankan Navy

இதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு மூல காரணம். ஹஜ்ஜு பெருநாள் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை இட்டு அவர்களை மிரட்டுவதும் பயமுறுத்துவதுமாக இருந்த சம்பவம் இன்று துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளை போன்றே இங்கு நடத்தப்படுகின்றனர். கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள கடற்படையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது? இச்சம்பவத்தில் பாதிப்படைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி வழங்க நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருகோணமலைக்கு பொருத்தம் இல்லாத சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மேற்பார்வையில் செம்மணி புதைகுழி அகழ்வு - விடுக்கப்பட்ட கோரிக்கை

சர்வதேச மேற்பார்வையில் செம்மணி புதைகுழி அகழ்வு - விடுக்கப்பட்ட கோரிக்கை

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026