கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: ஒருவர் உயிருடன் மீட்பு
கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிருடன் நாடு திரும்பியுள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 பேர் உயிரிழப்பு
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 கடற்றொழிலாளர்களுடன்“டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடிக் கப்பல் சென்றுள்ளது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என நினைத்து குடித்துள்ளனர்.
இதனையடுத்து 06 கடற்றொழிலாளர்களும் சுகயீனமடைந்த நிலையில் 5 பேர் அதே கப்பலில் இறந்துள்ளனர்.
உயிர் பிழைத்த கடற்றொழிலாளர்
இதன்போது, கப்பலின் தலைவர் 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 கடற்றொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இந்த நிலையில், 6 கடற்றொழிலாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த நிலையில் இன்று (1) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |