யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடலில் நீரின் அளவு குறைவு
இந்நிலையில்,நேற்றையதினம் (21) மாலை போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் உடல் சோர்வடைந்த நிலையில் குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு உடல்நிலை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, பரிசோதித்த வைத்தியர் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதனால் சோர்வு ஏற்படுகிற நிலையில் நீரை அதிகளவு அருந்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |