யாழில் வெடித்த மாபெரும் போராட்டம்...! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
புதிய இணைப்பு
இந்திய துணைத் தூதரகத்தில் மனுவொன்றை கையளித்த கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பேரணியாக வந்து யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 5 மீனவ பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டு யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது கடற்றொழிலாளர் யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை கையளித்தனர்.
இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் "உங்களது கடற்படை நடவடிக்கை எடுத்தால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரமுடியாது. எனவே கடற்படையை சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு" கூறியதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பேரணியானது யாழில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் நோக்கி சென்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி : பு. கஜிந்தன்
முதலாம் இணைப்பு
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.
மாபெரும் போராட்டம்
"தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நீரில் வளர்த்தினை களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர்.
இருப்பினும் துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையகடற்றொழிலாளர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் : பு.கஜிந்தன் மற்றும் பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 21 மணி நேரம் முன்
