வாகனங்கள் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிலிருந்து (Japan) இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
குறித்த வாகனங்கள் இன்று (27) ஹம்பாந்தோட்டை |(Hambantota) துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பலில் 300 வாகனங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களில் முன்பதிவு
வந்தடையவுள்ள வாகனங்களில், முன்பதிவு செய்தவர்களுக்கு அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு பின்னர் ஜப்பானிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கெப் ரக வாகனங்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 3000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 21 மணி நேரம் முன்
