யாழில் சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி பலி!
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சொகுசு பேருந்து
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் , அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , ஊர்காவற்துறை காவல்துறையினர் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி