கொழும்பிலிருந்து வெளிநாடொன்றுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்
இலங்கையின் குறைந்த கட்டண விமான நிறுவனமான FitsAir, 2024 ஏப்ரலில் கொழும்பு மற்றும் டாக்கா, பங்களாதேஷை இணைக்கும் நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் டாக்காவிற்கு இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நிலையில், இலங்கை வர்த்தகர்களிடமிருந்து கணிசமான ஆர்வத்தை ஈர்க்கும் வகையில், டாக்கா ஒரு பிரபலமான இடமாக உருவாகி வருகிறது.
இரண்டு முறை
இதனை அங்கீகரித்து, வளர்ந்து வரும் இந்த சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மலிவு விலையில், சரியான நேரத்தில் மற்றும் திறமையான விமான இணைப்பை வழங்குவதற்கு FitsAir தீர்மானித்துள்ளது.
"பங்களாதேஷின் பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறி வருகிறது, இந்த நேரத்தில் வணிகப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு போட்டி விலைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டாக்காவுக்கான எங்கள் இடைவிடாத சேவை இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று FitsAir இன் நிர்வாக இயக்குநர் அம்மார் காசிம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவைகள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நேரடி சேவைகள்
FitsAir இல் தொடக்கக் கட்டணங்களை 74,600 ரூபாய் முதல் வழங்குகிறது. புதிய டாக்கா பாதைக்கு கூடுதலாக, FitsAir தற்போது கொழும்பில் உள்ள அதன் மையத்திலிருந்து துபாய், மாலி மற்றும் சென்னைக்கு நேரடி சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயண இலக்குகள் மற்றும் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.fitsair.com இல் உள்ள FitsAir இன் இணையதளத்தைப் பார்வையிடுமாறும் அல்லது (+94) 117 940 940 என்ற எண்ணில் அவர்களின் பிரத்யேக வாடிக்கையாளர் சேவைக் குழுவையும் (+94) 777 811 118 என்ற எண்ணில் வட்ஸஅப் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது.