பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம் -ஐவரை கைது செய்தது காவல்துறை
பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்
தேசிய சிறுவர் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் லக்கல காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பி.பி.ஏ.ரணவீர, சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதி காவல்துறை பரிசோதகர் கயானி பண்டார உள்ளிட்ட காவல்துறைகுழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை
சிறுமி தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 19 மற்றும் 39 வயதுடைய லக்கல கலேய பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் பற்றிய தகவல்கள் வெளியாகி அவர்களைக் கைது செய்ய காவல்துறை குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் சிறுமி
லக்கல பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் இந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் வறுமை மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் யாரும் உரிய கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் குறித்து லக்கல காவல் நிலைய தலைமை ஆய்வாளர் பி.பி.ரணவீர, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி , பிரதி காவல்துறை பரிசோதகர் கயானி பண்டார ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி
நல்லூரில் மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர் - விசாரணைகள் தீவிரம்

