நல்லூரில் மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர் - விசாரணைகள் தீவிரம்
Jaffna
Crime Branch Criminal Investigation Department
By Sumithiran
நல்லூரில் மாணவன் மீது அதிபர் தாக்குதல்
நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணைகள் ஆரம்பம்
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
காவல்துறை புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி