சூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட ஐவர் கைது!
Police
Arrest
SriLanka
Peruwala
By Chanakyan
பேருவளை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
பேருவளை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக சூதாட்டம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
இதன்போது வீடொன்றில் தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் உள்ளிட்ட ஐவர் இணைந்து இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருவளை பகுதியைச் சேர்ந்த 32 -55 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து தாயக்கட்டையொன்றும் 26 000 ரூபாய் தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்