“கணேமுல்ல சஞ்சீவ” படுகாலைக்கு பின்னால் உள்ளவர்கள் : செவ்வந்தியிடமிருந்து வெளிவரும் தகவல்
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி, கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.தற்போது காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ள இவர் மீது தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளில் செவ்வந்தி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னால் ஐவர்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னால் ஐவர் செயற்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தலைமையில் “கணேமுல்ல சஞ்சீவ” கொலை நடந்துள்ளது.

இந்த கொலை திட்டத்திற்கு பின்னால் கெஹெல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்து , தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளனர்.
செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணை
இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கு காணொளியை இஷாராவுக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.இதையடுத்து,இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்