ஐ.நா தீவிரவாதிகளாக அறிவித்த ஐவர் தலிபான் அமைச்சரவையில்
தலிபான்களின் இடைக்கால அரசில் ஐ.நாவால் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட 5 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான் நிறுவனத் தலைவரின் நெருங்கிய உதவியாளராக இருந்த முல்லா ஹசன் அகுந்த் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது முக்கிய பதவிகளை வகித்த இவர் மீது இப்போதும் ஐ.நாவின் பொருளாதார தடைகள் உள்ளன.
அமெரிக்காவால் தலைக்கு 73 கோடி ரூபாய் விலை பேசப்பட்ட சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவால் பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டுள்ள ஹக்கானி அமைப்பை சேர்ந்தவர்.
அல் கொய்தாவுடன் இணைந்து பல தற்கொலை தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ஐநாவால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட முல்லா முகம்மது யாக்கூப், அமீர் கான் முத்தகி, ஆகியோரும் இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.