கட்டுநாயக்கவில் பெருந்தொகை தங்கத்துடன் விமான பணிப்பெண் கைது
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Income Tax Department
By Dilakshan
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (04) சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயது விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகிறது.
தங்க பிஸ்கட்டுகள்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, அவரின் பயணப்பொதியில் குறித்த தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவரின் பயணப்பொதியில் 01.163 கிலோகிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் என்பன காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |