காணாமற்போன கத்தரிக்கோல் : இரத்து செய்யப்பட்ட விமானங்கள் : பயணிகள் அந்தரிப்பு
ஜப்பான்(japan) விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து ஒரு சோடி கத்தரிக்கோல் மாயமானதை அடுத்து 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் 201 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் Hokkaido பகுதியில் அமைந்துள்ள New Chitose விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தரிக்கோல் காணாமற்போன சம்பவத்தை அடுத்து நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மீண்டும் சோதனை
ஏற்கனவே பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பயணிகளும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மாயமான கத்தரிக்கோலை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுத்தனர். ஆனால் இறுதியில், அதே களஞ்சியசாலையிலேயே அந்த கத்தரிக்கோலை கண்டுபிடித்தனர்.
பயணிகள் பலர் பாதிப்பு
சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், ஞாயிறன்று கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மாயமானதாக கூறப்படும் அதே கத்தரிக்கோல் தானா என்பதை உறுதி செய்த பின்னரே, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அதனாலேயே தாமதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்தரிக்கோல் மாயமானதை அடுத்து விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதாலும் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |