சென்னை விமான நிலையத்திற்கு தற்காலிக பூட்டு
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் (Chennai Airport) தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (30.11.2024) நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது.
விமான ஓடுபாதையில் தண்ணீர்
பெஞ்சல் புயல் இன்று பகல் தமிழகத்தின் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெஞ்சல் புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |