இன்று முதல் ஐந்து நாடுகளுக்கான விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டன
srilanka
flight
countries
cancel
By Sumithiran
இலங்கையிலிருந்து ஐந்து நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த துபாய் மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் 05/12 இன்று காலை முதல் நிறுத்தப்படும் என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்
கொவிட்-19 தொற்று காரணமாக மேற்கண்ட நாடுகளில் இலங்கை பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, சரக்கு விமான சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்