யாழ். இளைஞர்களின் முன்மாதிரியான செயல் : குவியும் பாராட்டுகள்!
Jaffna
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Kajinthan
அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோரத் தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக, யாழ். இளைஞர்களால் மலையக மக்களுக்கு பெருவாரியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
15 இலட்சத்து 60ஆயிரம் ரூபா நிதி, ஆடைகள், உலருணவுப் பொதிகள் 246 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். இளைஞர்களின் இந்த முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


