அடுத்த 24 மணித்தியாலம் வரை நீடிக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Climate Change
By Harrish
நாட்டில் தொடரும் கடும் மழை வீழ்ச்சியினால் தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
தற்போது, அதிகரித்து வரும் மழைவீழ்ச்சியினால் தாழ்நில பகுதிகளில் உள்ள ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைவது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதியின் ஊடாக வீதிகளில் பயணிக்கும் பொது மக்கள் உட்பட வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி