திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அடுத்த 24 மணிநேரங்களில் தாழ்வான பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தின் தமன்கடுவ, லங்காபுர, திம்புலாகல மற்றும் வெலிகந்த பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் சேருவில, கின்னியா மற்றும் முதூர் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மகாவலி ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலைமையைப் பொருட்படுத்தி கீழ்க்கண்ட இடங்கள் நீரில் மூழ்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
நீரில் மூழ்கும் வாய்ப்பு
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி.

சோமாவதி ரஜமகா விகாரைக்கு செல்லும் அணுகுமார்க்கம்.
சோமாவதிய ரஜமகா விகாரைவளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள்.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சாலைப் பயனாளர்கள் விழிப்புடன் இருந்து, அனர்த்த மேலாண்மை பிரிவுகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நீர்ப்பாசனத் துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |