கிரான் பாலத்திற்கு மேல் பாய்ந்தோடும் வெள்ள நீர்
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசங்களை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேல் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான்கவுகள் அந்தந்த நீர்மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளன.
பலத்த காற்று
இந்த தாழமுக்கத்தால் நேற்று இரவு மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் பலத்த காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, தும்பங்கேணி, றூகம், கட்டுமுறிவு, வாகனேரி, வெலிகந்தை, வடமுனை, புனானை, மாவடி ஓடை போன்ற குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் இரு வான் கதவுகள் 3 அடிக்கும் ஒரு வான்கதவு 4 இடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஏனைய குளங்களின் வான் கதவுகள் அந்தந்த குளத்தின் நீர் மட்டத்துக்கு அமைவாக வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனையடுத்து தாழ்நிலப்பகுதிகள் மற்றும் நெல் வயல்கள் வெள்ளநீரில் மூழ்கிவருகின்றதுடன் கிரானுக்கும் புலிபாந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்தின் ஊடாக வெள்ள நீர் 4 அடி உயரத்திற்கு பாய்ந்து வருவதால் அந்த பகுதிகளுக்கான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
