மற்றுமொரு அத்தியாவசிய பொருளின் விலையும் அதிகரிப்பு
price
increase
wheat flour
pima company
By Sumithiran
நாட்டில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்ரப்படும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்களை சொல்லொணா துன்பத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே சீனி, பருப்பு, சிமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் பால்மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.