தலைநகரில் பதற்றம்: மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை ,கண்ணீர்ப் புகை பிரயோகம்(காணொளி)
கண்ணீர்ப் புகைத் தாக்குதல்
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - யோர்க் வீதியில் மருத்துவ பீட மாணவர்கள் மீது தற்போது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து களத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை
உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் டெக்னிக்கல் சந்தி வழியாக பெட்டாவை நோக்கி பேரணியாகச் சென்றது.
மருத்துவ பீட மாணவர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து களத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நீர்த்தாரகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.