ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றவுள்ள அமைச்சர் விஜித ஹேரத்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் கருப்பொருளான "நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பலனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை" என்ற கருப்பொருளுக்கு அமைய அமைச்சர் தனது உரையை நிகழ்த்துவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை
நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள்
இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய வெளிவிவகாரக் கொள்கை முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படவுள்ளது.

பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கு இணையாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வு இன்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |