சிறிலங்காவின் கொழும்பு டயஸ்போரா பணியகத்தின் நோக்கம் என்ன..! ரணிலின் நரி திட்டம்
மேற்குலகின் ஆதரவு உபாயம்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவு இலங்கைக்கு ஒரு பெரிய பலம் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து, நாட்டின் சமகால நெருக்கடிகளில் மேற்குலகின் ஆதரவை பெறும் ஒரு உபாயம் என புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஐயம் வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கான பணியகம் ஒன்றை கொழும்பில் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புக்களின் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் புலம்பெயர் அமைப்புகள் குறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இந்த பகிரங்க கருத்தே பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கான பணியகம்
இந்த நிலையில், இலங்கையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கான பணியகம் ஒன்றை அமைக்கும் திட்டம் சிறந்த யோசனை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பணியகத்தில் தனது பங்களிப்பு குறித்து இன்னும் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இன்று எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்கள் என தமிழரை மாத்திரம் கருதாது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் இணைத்து இந்த பணியகத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.