அநுர அரசின் ஆட்சிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் பொன்சேகா
Sarath Fonseka
NPP Government
By Sumithiran
கடந்த ஆட்சியை விட, தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சி நல்ல நிலையில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
திருட்டு, அச்சுறுத்தல், மோசடி என்பவற்றை நிறுத்துவதன் ஊடாக நாட்டிற்கு நன்மை கிடைக்குமென அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் - பாதாள குழு செயற்பாடுகளையும் தடுக்க வேண்டும்
மக்களின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்களை சிறைக்கு அனுப்புவதை இன்று காண முடிகிறது. இது தொடர்ந்தம் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாட்டிற்கு பாரிய பலம் கிடைக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள குழு செயற்பாடுகளை தடுப்பதும் இதனுடன் இடம்பெற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி