பொன்சேகாவுடனான சமாதான பேச்சுக்கள் தகர்ந்தன
SJB
Sajith Premadasa
Sarath Fonseka
Tissa Attanayake
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா(Sarath Fonseka) மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமக்கு அதிபர் வேட்புமனுவை வழங்குமாறு பொன்சேகா விடுத்த கோரிக்கையே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடியை தீர்க்க களமிறங்கிய திஸ்ஸ அத்தநாயக்க
பொன்சேகாவுக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான நெருக்கடியை தீர்த்து வைப்பதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதிபர் வேட்புமனு மீதான கோரிக்கை காரணமாக கலந்துரையாடல்களை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 7 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி