உணவுப் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகள் - வெளியான அறிக்கை
Champika Ranawaka
Ministry of Health Sri Lanka
By Dharu
இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் உணவுப் பணவீக்கம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து குறித்த அறிக்கை கூறுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறியும் தேசிய சட்டமன்ற துணைக் குழுவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பற்றாக்குறையால் கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை குறியீட்டெண் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
சம்பிக்க ரணவக்க
கடந்த நாடாளுமன்ற உரையில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பச் சுகாதாரப் பணியாளர்கள் மட்டத்தில் முன்னுரிமைகளை இனங்கண்டு இந்த சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென குறித்த குழுவின் தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி