மீண்டும் அதிகரிக்கவுள்ள உணவு பார்சல் விலை
நாட்டில் வரலாறு காணாதவகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் உணவு பார்சல் உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் அசேல சம்பத்(Asela Sampath) இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது போஞ்சி, கரட் உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றின் விலைகள் 500 ரூபாய்க்கு அதிகமாக உள்ளதாகவும் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மரக்கறி வகைகளின் விலை உயர்வை அடுத்து மரவள்ளிக்கிழங்கு, பூசணி போன்றவற்றை வைத்து மாத்திரமே உணவு பொதி பார்சல் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில்
தற்போதும் உணவு பார்சல் ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா அதிகரிக்கப்பட்டு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் எதிர்காலத்தில் மேலும் அதனை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.