அதிகரிக்கப்போகும் உணவுப்பொருட்களின் விலைகள்
Food Shortages
Sri Lanka Food Crisis
Laugfs Gas Price
By Jaso
எதிர்காலத்தில் உணவகங்கள் மற்றும் மதுபான நிலைய உணவுப் பொருட்களின் விலைகள் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (07) இரவு லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம் காரணமாக எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இன்று (07) காலை ஊடக சந்திப்பை நடத்திய அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருகாஷன், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறியது போல், எரிவாயு விலைகளை முறையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |