நள்ளிரவு முதல் லாப்ஃ எரிவாயு விலையில் அதிகரிப்பு
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Dhilak
இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஃ சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |