எதிர்க்கட்சியின் இனவாத கோஷம்! மீண்டும் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி
ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நமது மிகப்பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மாற்றம்
அத்துடன், கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இன்று(06) கருத்து தெரிவிக்கையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |