பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர்!
பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தணிக்கையின் போது, பல பிரான்ஸ் சர்வதேச வீரர்களின் முகவரான சோனியா சோயிட் அளித்த சாட்சியத்தை தொடர்ந்து பாரிஸ் அரசு வழக்கறிஞர்களிடம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற நேர்காணலின் போது, பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFF) தலைவர் நோயல் லெ கிரேட்-டின் தேவையற்ற பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் அந்தரங்கம் தொடர்பாக எதையும் வெளிப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
750 யூரோக்கள் வரை அபராதம்
பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, 81 வயதான Le Graet விசாரணை முடியும் வரை பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமையன்று AFP க்கு Le Graet அளித்த அறிக்கையில், ஊடகங்களில் கசிந்த தகவலால் திகைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
பிரான்ஸ் சட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டு என்பது நபர் ஒருவரின் கண்ணியத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் மேலும் இந்த பாலியல் குற்றத்திற்கு 750 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
