கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!
Lionel Messi
Football
By pavan
பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி அவரது வாழ்க்கையில் 44வது கோப்பையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மெஸ்ஸி, பிரெஞ்சு கால்பந்து கழகமான PSG அணியை விட்டு வெளியேறி அமெரிக்க கால்பந்து கழகமான இன்டர் மியாமியில் சேர்ந்ததையடுத்து தனது முதல் சீசனிலேயே அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
லீக் கோப்பை 2023-ன் ஒரு பகுதியாக, நேற்றுமுன்தினம் (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மியாமி நாஷ்வில்லை எதிர்கொண்டது.
புதிய சாதனை

மியாமி (10-9) பெனால்டி ஷூட் அவுட்டில் நாஷ்வில்லை வீழ்த்தி லீக் கோப்பையை வென்றது.
இந்த போட்டியில் வெற்றிக்கோப்பையை மெஸ்ஸி தனதாக்கிக்கொண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளது.
இதுவரை எந்த கால்பந்து வீரரும் தனது வாழ்க்கையில் இவ்வளவு கோப்பைகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
