"அரகலய” என்ற போராட்டத்தின் பின்னணியில் யார் - நாமல் அதிரடி..!
Go Home Gota
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
“அரகலய” என்ற காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளித்த வெளிநாட்டுத் தரப்பு யார் என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதையை அதிபரும் அமைச்சரவையும் அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் விளைவுகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பொதுஜன பெரமுன மட்டுமல்ல, அரகலய போராட்டத்தில் பங்கேற்ற ஜனதா விமுக்தி பெரமுனாவும் (மக்கள் விடுதலை முன்னணி) கூட போராட்டத்தில் வெளிநாட்டுத் தரப்பின் பங்கு இருந்தது என்று கூறுகிறது.
அரகலய போராட்டம்
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இந்த விபரங்களை அம்பலப்படுத்தி நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தநிலையில் “அரகலய” என்ற போராட்டம் காரணமாகவே இன்று ரணில் விக்ரமசிங்க அதிபராக உள்ளார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்