நாடொன்றில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பக்க விளைவுகள்
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருவருக்கு வீக்கம் மற்றும் கண்களை சுற்றி தடித்தல் போன்ற கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு வழக்கமான தலைவலி, சோர்வு, தடுப்பூசி போட்ட இடத்தில் வலி போன்ற சாதாரண பிரச்சனைகளே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஃபைஸர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்திவரும் நெதர்லாந்து, இதுவரை சுமார் 47 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
இதற்கிடையே பல நாடுகளில் ஃபைஸர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நோர்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23பேர் உயிரிழந்தது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
இதேபோல இஸ்ரேல், பல்கேரியா போன்ற பல நாடுகளிலும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.