செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்
யான்பு கடற்கரைக்கு அப்பால் வடக்கு செங்கடலில் சவுதியின் வபா என்ற எண்ணெய் கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக யேமனின் ஹவுதி குழு, இன்று(05)புதன்கிழமை தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, X-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஏவுகணைகள் அந்தக் கப்பலை "துல்லியமாகத் தாக்கின" என்று கூறினார்.
சவுதி அரேபியா மீதான தங்களின் கடல்வழி முற்றுகை மற்றும் "முற்றுகைக்கு முற்றுகை" என்ற உத்தியின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல் என்று சரீ தெரிவித்தார்.
எட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
ஜூலை 22 அன்று முற்றுகை தொடங்கியதிலிருந்து, தம்மால் குறிவைக்கப்பட்ட சவுதி எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை இந்தத் தாக்குதலுடன் எட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 29 சவுதி எண்ணெய் கப்பல்கள் செங்கடல் மற்றும் அரபிக்கடலைக் கடந்து செல்லவிடாமல் தடுக்கப்பட்டன அல்லது திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டன என்றும் சரீ கூறினார்.
பாப் அல்-மண்டாப் நீரிணையிலிருந்து தாங்கள் முற்றுகையிட்டதாகக் கூறியதை வெற்றிகரமாக நிறைவேற்றியபிறகு, சவுதி அரேபியா தனது எண்ணெய் கப்பல்களை வடக்கு செங்கடலுக்குத் திருப்பிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும்
"விளைவுகளைப் பொருட்படுத்தாமல்", கடல்வழி அணுகல் பாதைகளைத் தடுக்கவும், அவை கடந்து செல்வதைத் தடுக்கவும், வடக்கு செங்கடலில் உள்ள சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தங்கள் குழு தொடர்ந்தும் தீவிரப்படுத்தி நடத்தும் என்று சரீ சபதம் செய்தார்.

இந்த சம்மபவங்கள் தொடர்பாக சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
காசாவில் 112 பேருக்கு கூட்டாக இறுதிச் சடங்கு: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட உடல்கள் அடக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |