“மாவீரர்களை நினைவு கூரத் தடை" வெளியிடப்பட்டுள்ள கடும் கண்டனம்
தமிழ் தாயகத்திற்காக போராடியவர்களை நினைவு கூற தடை செய்வது என்பது ஒரு கண்டிக்க தக்க விடயமாகும் என கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான சண்முகராஜா ஜீவராஜா (Shanmukaraja Jeevaraja) தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் ஆரம்ப நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட தேராவில் துயிலுமில்லத்தில் துப்பரவு பணிகள் செய்வதற்காக சென்றபோது சுண்டிக்குள பகுதியல் வைத்து நீதி மன்ற தடை உத்தரவு கொடுக்கப்பட்டது.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
1971ஆம் ஆண்டு சேகுவேரா ஒரே நாளில் 20அயிரம் சிங்களவர்களை அழித்த அவர்களுக்கே இன்று நினைவு கூற இடமளித்துள்ள இந்த கோட்டபாய அரசாங்கமானது.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்காக போராடிய எமது மாவீரர்களை நினைவு கூற தடை விதிப்பது கண்டிக்கதக்க விடயம். சிங்கள மக்களுக்கும் தமிழ்மக்களுக்கும் உள்ள உறவுகளை சிங்கள அரசியல்வாதிகள் தமது சொற்ப ஆசைகளுக்காக பிரித்து நிற்கின்றனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்பவர்கள் விடுதலைப்புலிகளின் பெயரை வைத்தே அரசியல் நடத்துவதாகவும் விடுதலைபுலிகளின் பெயர் இல்லையென்றால் அரசியலே இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.