கணனி உபகரணங்கள் என கட்டுநாயக்காவிற்கு வந்த பொதியால் பரபரப்பு
டுபாயிலிருந்து(dubai) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கணனி உபகரணங்கள் எனத்தெரிவித்து வந்திறங்கிய பொதியால் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள போலி முகவரிக்கு இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி முனையத்திற்கு விமான அஞ்சல் சேவையின் ஊடாக இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகள்
இவ்வாறு அனுப்பப்பட்ட பொதியில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகள் இருப்பதை இலங்கை சுங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரிகள் குழு கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி விமான சரக்கு முனையத்திற்கு வந்த இந்த பொதியை பொறுப்பேற்பதற்கு இதுவரை எந்தவொரு உரிமையாளரும் வராததால், இலங்கை சுங்கத் தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (11) இரவு இந்த பொதியை திறந்து பார்வையிட்டது.இதன்போது 08 பொதிகளுக்குள் இருந்த மான்செஸ்டர் சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |