சுற்றுலாவை முடித்து கட்டுநாயக்க சென்ற வெளிநாட்டு தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
Bandaranaike International Airport
Sri Lanka Tourism
Italy
By Jaso
இலங்கையில் தமது சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க நோக்கி சென்ற வெளிநாட்டு தம்பதி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த (76-78) வயதுடைய தம்பதிகளும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்களை ஏற்றிச் சென்ற கார், கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி