வெளிநாட்டுக் கடனை விரைவில் மறுசீரமைக்க முடிவு
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை விரைவில் மறுசீரமைக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்து கடன் வழங்குநர்களுடனும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகிய காலத்திற்குள் நிறைவு
அதிபரின் சீன விஜயத்தின் போது மேலும் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மறுசீரமைப்பு செயல்முறை குறுகிய காலத்திற்குள் முடிவடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் சுருங்கினாலும், 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அது வளர்ச்சியடையத் ஆரம்பிக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.