வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம்
Ali Sabry
Iran
By Vanan
சிறிலங்காவின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஈரானின் வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், அமைச்சர் அலி சப்ரி நாளை(4) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஈரான் அதிபருடன் சந்திப்பு

இந்த விஜயத்தின் போது, ஈரான் அதிபர் கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் அமைச்சர் அலி சப்ரி சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.
இதன்போது, ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்திலும் அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி