மூத்த தமிழ் அரசியல்வாதியான ஆனந்தசங்கரியை சந்தித்த வெளியுறவு அமைச்சர்
வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும், மூத்த தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ஆனந்தசங்கரிக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(03.07.2026) இடம்பெற்றுள்ளது.
93 வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி, இலங்கை அரசியலுக்கு ஆற்றிய பங்களிப்புகளையும், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் அவர் ஏற்படுத்திய முன்மாதிரியையும் அமைச்சர் பாராட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி தேர்தல் தொகுதி
வி. ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் இரண்டு காலகட்டங்களில் உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

1970 – 1983 கிளிநொச்சி தேர்தல் தொகுதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். 1977 தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றார்.
1983ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 6வது திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, TULF நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்தனர்.
பின்னர் 2000 – 2004 யாழ்ப்பாண மாவட்டம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்