இலங்கையில் நாய் வளர்த்த வெளிநாட்டு பிரஜைக்கு ஏற்பட்ட நிலை
இலங்கையில் பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரான்ஸ் நாட்டு பிரஜை (வயது 84) ஒருவரே அளுத்கம கவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐவரை கடித்து குதறியது
குறித்த வெளிநாட்டு பிரஜை க்ரேடன் வகையைச் சேர்ந்த 6 வயதான பெண் நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய், வீட்டிலிருந்து கடந்த 23ஆம் திகதி தப்பியோடி அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் மூவரையும் வீட்டு நாய்கள் மூன்றையும் கடித்து குதறியுள்ளது.அத்துடன் அந்த நாயும் நீர்வெறுப்பு நோய்த் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துவிட்டது.
பாதுகாப்பற்ற முறையில் நாய் வளர்ப்பு
அவ்வாறு கடித்து குதறப்பட்ட நாய்களில் இரண்டு மரணித்துவிட்டன எனத் தெரிவித்த அளுத்கம காவல்துறையினர், பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழ், வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
