அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வி முறைக்கு நிதி ரீதியாக அழிவை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை செய்தி நிறுவனமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது.
மாணவர் சேர்க்கை
சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும் மற்றும் பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும்.

வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் படிப்பதற்கு அனுமதிப்பது நாட்டின் உயர்கல்வி முறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கும் வணிக நடைமுறைக்கு நல்லது.
பல்கலைக்கழகங்கள்
பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ளன.

வெளி நாட்டு மாணவர்கள் இருப்பது நல்லது என்று நான் உண்மையில் நினைக்கிறேன், நான் உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகின்றேன்.
சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.
அமெரிக்க பொருளாதாரம்
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டொலர்களை பங்களிக்கின்றனர்.

உள்நாட்டு மாணவர்கள் செலுத்துவதை விட, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக செலுத்துகின்றனர்.
நான் அவர்களை விரும்புகிறேன் என்பதல்ல ஆனால் நான் அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |